Breaking News

போராட்டத்தை தொடர்வதா.. இல்லையா? நாளை முடிவு


நாளை காலை அமைச்சரவை குழுவுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்வதா, இல்லையா, என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என, ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதில், நான்கு பேர் அங்கம் வகிக்கின்றனர்.

No comments